புதினங்களின் சங்கமம்

யாழில் ஊடகப் பணியாளர் விபூசணனை தாக்கிய இருவர் கைது!!

யாழப்பாணத்தில் ஊடக பணியாளர் மீது தாக்குதல் மேற்ககொண்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ் . நகரின் மத்தியில் , கஸ்தூரியார் வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்றில் தொழிநுட்பவியலாளராக பணியாற்றும் விபூஷண் என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 தாக்குதலுக்கு இலக்கானவர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த  போது, பின்னால் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரை வழி மறித்து, ஏன் தாங்கள் முந்தி செல்வதற்கு வழி விடவில்லை என கேட்டு, தலைக்கவசத்தால் மிக மோசமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதல் தொடர்பிலான வீடியோ காட்சிகள் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராக்களில் பதிவாகியுள்ளது.

அதன் அடிப்படையில் பொலிஸார் தாக்குதலாளிகளை இனம் கொண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், இன்றைய தினம் (14) யாழ்ப்பாண பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

 ஓட்டுமடம் மற்றும் தாவடி பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x