பத்தரமுல்லையில் மேல்மாடியிலிருந்து பெண் உத்தியோகத்தர் ஹன்சனி வீழ்ந்து பலி!! ஏன் வீழ்ந்தார்?
பாதி கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தின் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து இளம் பட்டதாரி யுவதி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய நிவித்திகல, கல்லகே மண்டிய பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி பாக்யா ஜயதிலக்க என்ற 30 வயதுடைய யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதி மேலும் மூன்று யுவதிகளுடன் சம்பத் பிளேஸ், பத்தரமுல்லை பிரதான வீதியிலுள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் பகுதியில் தற்காலிகமாகத் தங்கியிருப்பதுடன், கடந்த வெள்ளிக்கிழமை (11) மாலை 6.40 மணியளவில் வேலை முடிந்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவருடன் அறையில் வசிக்கும் நிலப் பதிவாளர் அலுவலகத்தைச் சேர்ந்த தோழியும் வேலை முடிந்து வந்திருந்தார். உயிரிழந்த யுவதி, தனது தோழியை அழைத்து, இரவு உணவிற்கு கொண்டு வந்த இறாலை தயார் செய்வதாகக் கூறினார்.

