புதினங்களின் சங்கமம்

தேயிலை கொழுந்து அரைக்கும் போது இயந்திரத்திற்குள் தவறி விழுந்து தலை சிதறி பலியான விஜயகுமார்!

தேயிலை கொழுந்து அரைக்கும் போது இயந்திரத்திற்குள் தவறி விழுந்து தலை சிதறி உயிரி*ழந்த நபர்
தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருக்கும் போது தவறி இயந்திரத்திற்குள் விழுந்த நபர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் இடம் பெற்று உள்ளது.
இவ்வாறு இயந்திரத்தில் சிக்குண்டு இறந்தவர் கிட்ண்ணன் விஜயகுமார் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில் இறந்தவரின் சடலம் மவுஸ்சாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் சம்பவம் நடந்த இடத்தில் வைக்க பட்டு உள்ளது
திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி வந்து பார்த்த பின்னர் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை மேற்கொள்ள பட உள்ளதாக கூறினார்.
May be an image of one or more people