புதினங்களின் சங்கமம்

பார் லைசன்ஸ் விபரங்களை வெளியிட வேண்டாம் என அநுராவிடம் கெஞ்சினாரா சிறீதரன்?

முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று ஜனாதிபதி அநுராவை நட்பு ரீதியாக சந்தித்துள்ளதாகத் தெரியவருகின்றது. முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருக்கும் போது சிறீதரன் எதற்காக ஓடிப்போய் அவசர அவசரமாக ஜனாதிபதியை சந்தித்தார் என்பது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளியியாகியுள்ளது. சிறிதரன் கள்ளக் குணத்தில் கிளிநொச்சியில் பார் அனுமதி எடுக்காது யாழ்ப்பாணம் அல்லது முல்லைத்தீவு போன்ற இடங்களுக்காக பார் அனுமதிப்பத்திரத்தை விற்றுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சிறிதரன் ஜனாதிபதியை ஓடிச் சென்று சந்தித்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனதும் ஏனையவர்களதும் பார் லைசன்ஸ் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டாம் என்று ஜனாதிபதியை கெஞ்சினாரா? என்றும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.