வடக்கு, கிழக்கில் செயற்படும் ஜே.வி.பி உறுப்பினர்கள் மற்றும் தோழர்களுக்கு…..
வடக்கு, கிழக்கில் தமிழ் பேசுபவர்களாக உள்ளவர்களில் பெரும்பாலான பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் குறிப்பிடத்தக்க அரச உயரதிகாரிகள் போன்றவர்கள் பச்சைக் கள்ளர்களும் பாஞ்சோந்திகளுமாக இருக்கின்றார்கள். இவர்கள் தங்கள் ஊழல்கள், துஸ்பிரயோகங்கள் போன்றவற்றை மறைப்பதற்காகவும் திரும்பவும் அவற்றை அதிகாரத்துடன் செய்வதற்காகவும் உங்களின் ஆதரவாளர்கள் போல் ஒட்டி உறவாட வரலாம். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் உங்களுடன் யார் உறவாடித் திரிந்தார்களோ அவர்களுடனேயே நீங்கள் உங்கள் அரசியல்செயற்பாடுகளை செய்து கொண்டு முன்னேறுங்கள். புதிய முகங்கள் உங்களுடன் இணைய வந்தால் அவர்கள் தொடர்பாக நுாற்றுக்கு ஆயிரம் தடவை புலனாய்வு செய்த பின்னரே அவர்களை நீங்கள் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். இல்லாது விடில் நீங்களும் பத்தோடு பதினொன்றாக தமிழ் மக்களால் கருதப்படுவீர்கள். வடக்கு கிழக்கில் செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்பாக தற்போதய தமிழ் இளம் சமுதாயம் கடும் விரக்தி நிலையில் உள்ளது. ஆகவே அவர்கள் எதற்காக விரக்தியில் உள்ளார்கள் என்பதை சரியாக அறிந்து அவர்களின் மன ஓட்டத்தை்ப் புரிந்து அரசியல் செய்வீர்களாக இருந்தால் வடக்கு, கிழக்குப் பகுதியில் உங்களுக்கும் ஒரு ஆதரவு அலை கட்டாயம் இருக்கும்.