கிளிநொச்சியில் பாரிய மரத்திற்கு அசிட் ஊற்றி கொலை செய்ய முற்சித்த நகைக்கடைக்கடைக்காரன்!!
கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு முன்பாக உள்ள பாரிய மரம் ஒன்றை அருகில் உள்ள நகை கடைக்காரர் அசிட் ஊற்றி கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.
மேற்குறித்த இடத்தில் பச்சையாக பரந்து விரிந்து அழகாக பாரிய மரம் ஒன்று காணப்படுகிறது. இந்த மரத்தின் கீழ் முச்சக்கர வண்டி தரிப்பிடம் உண்டு, அத்தோடு பேரூந்துக்காக காத்திருக்கி்ன்ற மக்கள் மற்றும் வெயிலுக்கு ஓதுங்குகின்ற மக்கள் என பெருமளவானவர்கள் கூடுகின்ற இடம்.
இந்த மரத்தையே குறித்த நகைக்கடைக்காரர் அசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனையடுத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து பொலீஸாரால் இருவர் கைது செய்யப்பட்டு ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் மரத்தை சுற்றி உள்ள மண் அகற்றப்பட்டு புதிய மண் இடப்பட்டு நகைக்கடைகாரால் சீர் செய்யப்படுவதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் இன்னும் சில நாட்களின் பின்னரே மரம் உயிரோடு இருக்குமா? இறந்து போகுமா, என்பது தெரியவரும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மரம் இறந்தால் சம்மந்தப்பட்ட நபருக்கு கொலை குற்றத்திற்கான தண்டனை வழங்கப்படவேண்டும்