யாழ்ப்பாணம் – இணுவில், காரைக்கால் பகுதியில் இன்று (03) சனிக்கிழமை இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், தனது இரு கால்களையும் ஒரு கையையும் இழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டுக்கு முன்பாக உள்ள புகையிரதப் பாதையில் ஹெட்செட் அணிந்து பாடல் கேட்டுக்கொண்டிருந்தபோது படுத்திருந்ததாகவும், அப்போது அந்தப் பாதையில் பயணித்த புகையிரதம் அவர் மீது மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் இரு கால்களும் ஒரு கையும் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





