Home புதினங்களின் சங்கமம் கனடாவில் பெண்ணை அச்சுறுத்தி கத்த கத்த ஆடையை அகற்றி இரகசிய பகுதிக்குள் கை வைத்த தமிழ்...

கனடாவில் பெண்ணை அச்சுறுத்தி கத்த கத்த ஆடையை அகற்றி இரகசிய பகுதிக்குள் கை வைத்த தமிழ் காவாலியை பொலிசார் தேடுகின்றனர்!

கனடாவின் ஸ்கார்புரோ பகுதியில் பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். டொரண்டோ பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, கடந்த மாதம் கென்னடி வீதி மற்றும் புரோக்ராஸ் அவென்யூ பகுதிக்கு அருகில் இரவு சுமார் 9.00 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் தனது வாகனத்தில் அப்பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்ரஸ் கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு தேடப்பட்டு வருகிறார்.
தாக்குதல் நடத்துதல், பாலியல் துன்புறுத்தல், ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்,பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்லுதல், ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்துதல், பிணை நிபந்தனைகளை மீறுதல்உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments