பைத்தியர் அர்ச்சுனாவின் அலப்பறை தாங்காமல் சாவகச்சேரி ஆச்சி அனுராவுக்கு எழுதிய கடிதம் இது!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
கனம் சனாதிபதி அனுர அவர்களே!
சாவகச்சேரியில் இருந்து அம்மாச்சி எழுதும் கடுதாசி.
நான் நலம். நீங்கள் நலமா?
சனாதிபதியாக பதவியேற்று பரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்களிடம் ஒரு அவசரமான உதவியை வேண்டிநிற்கிறேன்.
வடக்கு கிழக்கு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரு பேருதவியாக அது இருக்கும் எண்டு நம்புகிறேன்.
சின்ராசு என்ர பேரன். அவன் ஒரு நல்ல மருத்துவன். நேர்மையான பொடியன். நல்லா படிப்பான்.
சாவகச்சேரி ஆசுப்பத்திரியில் நடந்த “உழல்களை” தட்டிக்கேட்டான். அவனை வேலையில இருந்து தூக்கிட்டாங்கள்.
கடந்த மூண்டு மாதமாக அதால மன உளைச்சலில் இருக்கிறான்.
பெரதேனியாவில வேலை செய்யச்சொல்லி அவனை பதவி இறக்கிப்போட்டாங்கள். அது பிடிக்காமல் மெடிக்கல் லீவைப்போட்டுவிட்டு கண்டறியாத அரசியல் பேசி திரியிறான்.
இப்ப சேர்க்கை சரியில்லாமல் குழப்படி செய்து திரியிறான். சொல்வழி கேக்குறான் இல்லை. எந்த நேரமும் போனும் கையுமா திரியுறான். ஒண்டுக்கு நாலு போன் வைச்சிருக்கிறான்.
இரவிரவாக நித்திரை முழிச்சு Tik Tok இல தொங்குறான். தேள்வையில்லாத பேக்கதை கதைக்கிறான்.
பேஸ்புக்தான் வாழ்க்கை எண்டு நினைச்சு அதுக்குள்ள வாழுறான். சின்ராசு நிஜ உலகத்தில் இல்லை. கற்பனை உலகத்தில் வாழுறான்.
அவனை சுத்தி இருக்கிற தப்பான ஆக்கள் அவனை “ஏத்தி” விட்டு கூத்துப்பாக்குறாங்கள்.
அது தெரியாமல் தான் ஏதோ பெரிய அரசியல் புலி எண்ட கணக்கில பினாத்துறான் சின்ராசு.
சத்தியமா அவனுக்கு அரசியலில் அரிவரிகூட தெரியாது எண்டு எனக்கு வடிவா தெரியும். அது அவனுக்கும் தெரியும்.
நீங்கள் “சுகாதார அமைச்சுப்பதவி” குடுப்பியள் எண்டு ஒரு சில மூளை கழண்டதுகள் சொல்ல அதை நம்புற அளவுக்குத்தான் சின்ராசுவின் மனநிலை இருக்கிறது.
தயவுசெய்து உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவெனில்;
உங்களுக்கு சின்ராசுவை ஆரண்டு தெரியாது எண்டு எனக்கு வடிவாத்தெரியும்.
ஆனாலும் எனக்காக சின்ராசுவின் வேலையை திருப்பிக்குடுத்து அவனை ஏதாவது ஒரு ஆசுப்பத்திரியில் குத்தி இருத்திவிடவும்.
இல்லையெண்டால்;
நான் விபரீதமான முடிவை எடுக்கவேண்டிவரும்.
என் உயிர் உங்களின் கையில்தான் இருக்கிறது. ஒரு கிழவியின் சாவுக்கு காரணமாக ஒரு சனாதிபதி இருந்தார் எண்டு நாளைக்கு வரலாறு உங்களை கேலிசெய்யும்.
என்னால முடியல்ல அனுர மாத்தையா!
அன்புடன்