நான்கு நிமிடத்திற்கு ஒரு இறப்பு ! அவசரப் பணியில் இந்திய ராணுவம் !

இந்தியாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 346,786 ஆக உயர்ந்து உலகளாவிய ரீதியில் ஒரே நாளில் அதிகூடிய தொற்று எனற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இதே அளவான எண்ணிக்கையை எட்டி வருகின்றது.. நாட்டின் சனத்தொகை அடர்த்தி கூடிய இடங்களில் பிராண வாயு கலன்களுக்காக கையேந்தும் பரிதாப நிலை காணப்படுகிறது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிட் தொற்று கடுகதியில் மோசமடைந்து வரும் இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நன்கு நிமிடத்திற்கு ஒரு இறப்பு பதிவாகி வருகிறது
இந்த அவல நிலையை சமாளிக்க முடியாமல் வைத்தியசாலைகள் திண்டாடி வருகின்றன.
டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் பிராணவாயுவை விநியோகிக்க அரசங்கம் ராணுவத்தை பணிக்கு அமர்த்தியுள்ளது.
“தயவுசெய்து எங்களுக்கு பிராண வாயு கிடைக்க உதவி செய்யுங்கள் “என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 16.6 மில்லியன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை 189,544 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
May be an image of fire and outdoors
May be an image of 1 person, standing, sitting and outdoors

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)