நாமலின் மனைவி நாட்டை விட்டு தப்பி ஓட்டம்!!
இலங்கையில் இருந்து அரசியல்வாதிகள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவியான லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 03.30 மணியளவில் டுபாய் நோக்கிப்
பலர் நாட்டைவிட்டு வெளியேற்றம்
அந்தவகையில் சனிக்கிழமை மாலை முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இத்தே கந்தே சத்தாதிஸ்ஸ தேரர் விமான நிலையம் ஊடாக ஹொங்கொங் நோக்கி பயணமாகியுள்ளார்.
2024 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை வெளியான முடிவுகளின் முழு விபரம்
2024 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை வெளியான முடிவுகளின் முழு விபரம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவைகள் இல்லாததால் துபாய் வழியாக அமெரிக்கா சென்றிருக்கலாம் என விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நேற்று முதல் விமானப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீட்டிப்பு
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீட்டிப்பு
அதேவேளை நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்து வருகின்றார்.
இவர் தேர்தல் பிரச்சாரங்களின் போது ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.