புதினங்களின் சங்கமம்

3 பிள்ளைகளின் தந்தையின் திருவிளையாடல்!! குழந்தை பிரசவித்த 15 வயதுச் சிறுமி!! சிறுமியின் தாய் கைதானது ஏன்?

மூன்று பிள்ளைகளின் தந்தையினால் வன்புணர்வுக்கு உள்ளான 15 வயது சிறுமி தனியார் வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்து தத்தெடுப்புக்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, வன்புணர்ச்சி செய்த நபரை அடையாளம் கண்டு மிதிகம பொலிஸார் கைது செய்வதுள்ளனர்.

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாகி பிரசவத்திற்கு தயார்படுத்தியதை சிறுமியின் பெற்றோர் மறைத்துவிட்டு, பிரசவத்திற்குப் பின் சட்டத்தரணியின் உதவியுடன் குழந்தையை வேறு தரப்பினருக்கு தத்துக் கொடுக்க தயாராகியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சிறுமிக்கு பதினைந்து வயது பத்து மாதங்கள். வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 30 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பத்து மாதங்களுக்கு முன்னர் சிறுமியை வன்புணர்வு செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சிறுமியின் பெற்றோரோ அல்லது வேறு எவரும் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை.

பின்னர், கொழும்பு பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு பிரசவத்திற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. சட்டத்தரணிகள் ஊடாக சிசுவை வேறு நபருக்கு மாற்ற முற்பட்ட வேளையில் வைத்தியசாலை தகவல் மூலம் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு இது தெரியவந்துள்ளது.

இதன்படி, நாரஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, ​​மிதிகம பிரதேசத்தில் சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி விசாரணைகள் மிதிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுமியை வன்புணர்வு செய்த மூன்று பிள்ளைகளின் தந்தையை மிதிகம பொலிஸார் நேற்று (18) கைது செய்தனர். சம்பவத்தை மறைக்க முயன்ற சந்தேகநபரின் சகோதரி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமியின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தை பிறந்த தகவலை பொலிஸாரிடம் இருந்து மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x