இலங்கையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலங்களால் பரபரப்பு..!
மகொன, பெலபொல்கஹவத்த பிரதேசத்தின் கடற்கரைக்கு அருகில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று(19) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், 65 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை மரண விசாரணை அதிகாரி மற்றும் பயாகல பொலிஸார், களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வு கூட அதிகாரிகள் ஆகியோர் கடற்கரையோரம் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, குருநாகல் – புத்தளம் தித்தவெல்ல குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த இனந்தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.