கடையில் வாங்கிய கித்துள் வெல்லத்துக்குள் கிடந்த அட்டை!! கடைக்காரன் சொன்ன பதில் இது!!
கொடிகாவத்தை பகுதியிலுள்ள கடையில் விற்பனை செய்யப்பட்ட வெல்லத்தில் இறந்த நிலையில் அட்டை ஒன்று காணப்பட்டுள்ளது.இதையடுத்து குறித்த வெல்லத்தை கொள்வனவு செய்த பெண், கடை உரிமையாளரிடம் திருப்பிக்கொடுத்துள்ளார்.கொங்கஹவத்தை, துந்தன, ஹன்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தின்பண்ட உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் இந்த வெல்லம் தயாரிக்கப்படுகிறது.கடையின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளருக்கு இதை அறிவித்த போது, “அதைப் பொருட்படுத வேண்டாம். தூக்கி எறியுங்கள்” என்று கூறியுள்ளார்.