15 கோடி ரூபா காணிக்கு கள்ள உறுதி முடித்து ஆட்டையைப் போட்ட கில்லாடிப் பெண்ணை தேடும் பொலிசார்!!
விசாரணைக்காக தேடப்படும் பெண் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
150 மில்லியன் ரூபா பெறுமதியான காணிக்கு பொய்யான ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை கையகப்படுத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அவருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, குறித்த பெண் வேறு ஒருவரைப் போன்று அடையாளப்படுத்தி போலியான பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் தகவல் பொலிஸாரால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவரது புகைப்படம் கீழே காட்டப்பட்டுள்ளது.
இவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு – 011 243 4504
குற்றப் புலனாய்வுத் திணைக்கள செயற்பாட்டு அறை – 011 242 2176