புதினங்களின் சங்கமம்

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமனம்!

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளராக இருந்த  திருமதி தனுஜா முருகேசன்  வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான இந்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் இன்று வழங்கி வைத்தார்.
இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான அவர் தனது கடமைகளை இந்த வாரம் ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இவரும் முன்னைய பிரதம செயலாளர் இளங்கோவன் அவர்களைப் போல் சிறிது காலத்திலேயே ஓய்வு பெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.