முதல் முதல் அப்பாவும் அதன் பின் 2 அண்ணாக்களும் என்னை சீரழித்தனர்!! 12 வயதான வெலிமடைச் சிறுமியின் வாக்குமூலம்!!
12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் பதின்ம வயதான இரண்டு சகோதரர்கள் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் 47 வயதுடைய தந்தையும் 18 மற்றும் 15 வயதுடைய இரு சகோதரர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டுகொள்ளாத தாயார்
பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில் தனது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மற்றுமொரு நாள் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத போது தனது இரு சகோதரர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தை எவரிடமும் கூறக் கூடாது என சிறுமியை அச்சுறுத்தியுள்ளதால் சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவிக்காமலிருந்துள்ளார்.
அதன் பின்னர், சிறுமியின் வீட்டிற்குச் சென்ற உறவினர் ஒருவர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதை அடுத்து அது தொடர்பில் சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் மூத்த சகோதரனுக்கு வெலிப்பிட்டிய பிரதேசத்தில் வேலை வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதால் பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவர் சிறுமியின் வீட்டைச் சோதனையிடுவதற்குச் சென்றபோது, சிறுமி தனக்கு நடந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அந்த அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த அதிகாரி இது தொடர்பில் வெலிகம பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில்,விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரான தந்தை மற்றும் இரு சகோதரர்களைக் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.