கொக்குவில் இந்துக்கல்லுாரி மாணவி வினுதாவை டிப்பரால் கொன்ற சிங்களச் சாரதி பாதுகாப்பாக தப்பியது எப்படி? அதிர்ச்சி வீடியோ
நேற்று (10.09.2024) பிற்பகல் 3.00 மணியளவில் யாழ். மருத்துவபீடத்திற்கு அண்மையாக, ரிப்பர் வாகனம் சைக்கிளில் வந்த மாணவியை மோதியதில்கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற மாணவி படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமானார்.
நல்லூர் பிரதேசசபை வீதியின் வடக்காக பாரிய கட்டிடத்தொகுதி ஒன்றை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தபோதும் பிரதேச சபை அதிகாரிகள் கட்டிடவேலை இயந்திர சாதனங்கள் வீதியின் போக்குவரத்திற்கு இடையூறாக வைத்து வேலைகள் நடைபெறுவதைக் கவனிப்பதில்லை என்றும் கொங்கீறீட் குழைக்கும் இயந்திரம் ஒன்று, மாணவியின் துவி ச்சக்கர வண்டிக்கு இடையூறாக இருந்ததால் குறுகிய அவ்வீதியால் வேகத்தைத் தணிக்காமல் அதி வேகமாக வந்த ரிப்பர் மாணவியை மோதியது என்றும் தெரியவருகிறது.
ரிப்பர் சாரதி கட்டப்பட்டு க் கொண்டிருக்கும் கட்டட ப்பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டிருந்தார்.
பல நிமிடங்களாக மாணவி தலையின் ஒரு பகுதி கடுமையாக உடைந்து சேதப்பட்ட நிலையில் இரத்தம் ஓடியபடி துடிதுடித்துக் கொண்டிருந்ததாகவும் அருகில் நின்ற முச்சக்கர வண்டிச் சாரதிகள் எவரும் உதவ முன்வரவில்லை என்றும் தெரியவருகிறது.
மேலும் அருகில் வீடுகளில் வசிக்கும் சில பல்கலைக்கழக மாணவிகள் கண்ணீர் விட்டு ” உயிர் இருக்கிறது….உயிர் இருக்கிறது….காப்பாற்றுங்கள்….”என்று கதறி அழுது விபத்துக்குள்ளான மாணவியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கெஞ்சி மன்றாடியதாகவும் தெரியவருகிறது.
எனினும் யாரும் அசையவில்லை.
பின்னர் அவசர அம்புலன்ஸ் மூலம் மாணவி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார்.
சற்றுப் பிந்தி சம்பவ இடத்திற்கு வந்த பொலிசாரின் முச்சக்கர வண்டியிலிருந்து ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் இறங்கிச் சென்று கட்டிடத்துள் இருந்த சாரதியை முச்சக்கர வண்டியில் ஏற்றி கவனமாக அனுப்பினார்.
பின்னர் விசாரணைக்காக பல வாகனங்களில் அங்கு வந்து பொலிசார் இறங்கினர்.
கொக்குவில் கிழக்கில் மாணவியின் உறவுகள் குழறி அழுது கண்ணீர் வடித்தபடி உள்ளனர் என சம்பவ இடத்துக்கு வந்த அயலவர் ஒருவர் தெரிவித்தார்.