யாழில் நடிகை மாளவிகாவின் தொடை பற்றி வகுப்பெடுத்த தமிழ் வாத்தி மீது கணித வாத்தியார் தாக்குதல்!!
யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்விகற்கும் ஓ.எல் மாணவர்களுக்கு தமிழ் வாத்தியார் மாளவிகாவின் தொடை தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் விளக்கம் கூறி பாடம் படிப்பித்துள்ளார். அந் நேரத்தில் பக்கத்து வகுப்பில் கணிதம் கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென தமிழ் வாத்தியாரின் வகுப்புக்குள் புகுந்து வாத்தியார் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனையடுத்து தமிழ் வாத்தியும் கணித வாத்தியார் மீது தாக்குதலை தொடுத்துள்ளார். இருவரும் கட்டிப்புரண்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால் குறித்த கல்வி நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரும் சிரமத்தின் மத்தியில் குறித்த கல்வி நிலையத்தில் நின்ற ஏனைய இரு ஆசிரியர்களும் சில மாணவர்களும் இரு ஆசிரியர்களையும் விலக்கி விட்டுள்ளனர். இருவரது சண்டை காரணமாக குறித்த இருவரிடமும் கல்வி பயின்ற மாணவர்களின் பெற்றோர்கள் சிலர், நிறுவன பொறுப்பாளரான பாடசாலை ஆசிரியரைச் சந்தித்து தமது விசனத்தை வெளியிட்டுள்ளார்கள். மாணவர்களை தமது பக்கம் ஈர்ப்பதற்காக தரக்குறைவான செயற்பாடுகளை தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் ஒரு சில ஆசிரியர்கள் மேற்கொண்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.