புதினங்களின் சங்கமம்

யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் தவறி விழுந்து மரணம்

யாழ் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் யாழ் செம்பியன்பற்று வடக்கு பகுதியை சேர்ந்த 63 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.நேற்று (01) காலை தேவாலயத்துக்கு சென்று விட்டு மகனுடன் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து தலையில் படுகாயமடைந்துள்ளார்.இதனையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மேலும் பெண்ணின் மரணம் தொடர்பில் இன்று (02) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டார்.