இரும்புக் கம்பியால் தாக்கி மனைவியைக் கொன்ற கணவனுக்கு மரண தண்டனை!!
இரும்புக் கம்பியால் தாக்கி மனைவியைக் கொன்ற கணவருக்கு எதிராக ஊவா மாகாண மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிபதி பிரசன்ன அல்விஸ் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
பதுளை கெண்டகொல்ல கிராமத்தில் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி 35 வயதுடைய பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த கணவருக்கு எதிராக பதுளை பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
விசாரணையின் போது சந்தேகநபருக்கும் இறந்தவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாகவும், இறந்தவருக்கு வேறு ஒரு தொடர்பு இருப்பதாகவும் இதனாலேயே மனைவியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அயலவர்களால் முச்சக்கரவண்டியில் அழைத்துச் செல்லப்பட்டு கந்தகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பதுளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.