இ.போ.ச பேரூந்து மோதியதில் மகள் உயிரிழப்பு.. தந்தை படுகாயம்..!
யக்கலமுல்ல, கராகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்த இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகள் உயிரிழந்துள்ளார்.