கதிர்காமத்தில் பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; அதிபருக்கு விளக்கமறியல்!!
கடந்த 22ஆம் திகதி கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடசாலை அதிபர் பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்பிலும் குறித்த சம்பவத்துக்கு உதவி செய்தவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துமாறு பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கோத்தமீகம கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் இணைந்து நேற்று (29) காலை 9 மணிக்கு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.