யாழ் கோட்டை, பண்ணைப் பகுதிகளில் கள்ளக்காதலர்களின் அட்டகாசம்!! ஆளுநர் கடும் உத்தரவு!!
யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம் , கோட்டை மற்றும் பண்ணை கடற்கரை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் பொலிசாரின் கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் , சமூக சீர்கேடான விடயங்கள் உள்ளிட்ட விரும்பத்தகாத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதனை அடுத்து குறித்த பகுதிகளில் திடீர் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளை மேற்கொள்ளுமாறும் , இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் இதர பகுதிகளையும் கண்டறிந்து , இந்த செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்