யாழில் கிருமி நாசினிகளை விற்றவருக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் தண்டம்!!
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கிருமி நாசினிகளை இறக்குமதி செய்து , விற்பனை செய்து வந்த வர்த்தகருக்கு ஒன்றை இலட்ச ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் களை , கிருமி நாசினிகளை விற்பனை செய்யப்படுவதாக விவசாய திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வர்த்தக நிலையத்தினை சோதனையிட்டுள்ளனர்.
அதன் போது , குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்து ஒரு தொகை சட்டவிரோத கிருமி நாசினிகள் மீட்கப்பட்டது. அதனை அடுத்து , வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , வர்த்தகர் குற்றத்தினை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவருக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது