புதினங்களின் சங்கமம்

வெளிநாட்டு விசரில் திரிந்த யாழ் இளைஞனை ஏமாற்றி 15 லட்சம் சுருட்டிய கொழும்பு பெண்!!

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி இளைஞனிடம் சுமார் 15 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி கொழும்பில் தற்போது வசித்து வரும் பெண்ணொருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் சுமார் 15 இலட்ச ரூபாய் வரையில் பெற்று மோசடி செய்துள்ளார். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞனால் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த வேளை , மோசடியில் ஈடுபட்ட பெண் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பெண் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்து அப்பெண்ணை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.