கடமை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 28 வயது இளம் குடும்பஸ்தரான ஆண் தாதி விபத்தில் பலி!!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமைகளை முடித்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாதி ஒருவர் கொஸ்கம பிரதேசத்தில் லொறியுடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.புவக்பிட்டிய, பஞ்சசர மாவத்தையில் வசிக்கும் சசிந்து நில்ஷான் செனவிரத்ன என்ற 28 வயதுடைய திருமணமான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
லொறியில் மோதி காயமடைந்த தாதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 16 ஆம் திகதி காலை உயிரிழந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை கொழும்பு வைத்திய அதிகாரி எஸ். வி. என். பெரேரா தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரான லொறி சாரதியை எதிர்வரும் 5ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.