தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில்..ஆறு வீட்டு திட்ட வீடுகளில் பயனாளிகள் இல்லை.!!
அரசாங்கத்தினால் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 620 அரச வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்ட நிலையில் ஆறு வீடுகளில் இதுவரை பயனாளிகள் வசிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
மீள் குடியேற்ற பகுதியான வலி வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் வழங்கப்பட்ட வீடு திட்டங்களில் பயனாளிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேச செயலகத்திற்கு தகவல் அறியும் சட்டமூலம் வழங்கப்பட்ட நிலையில் இவ்வாறு பதில் வழங்கப்பட்டுள்ளது
2020 ஆம் ஆண்டு 128 வீடுகளும் 2021 ஆம் ஆண்டு 417 வீடுகளும் 2022 ஆம் ஆண்டு ஒரு வீட்டுத் திட்டமும் 2023 ஆம் ஆண்டு 74 வீட்டு திட்டங்களுமாக மொத்தம் 620 வீட்டு தட்டங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 06 வீட்டு திட்டங்களில் பயனாளிகள் இதுவரை வசிக்கவில்லை என பதில் வழங்கப்பட்டுள்ளது