புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் கோயிலுக்கு பெற்றோர் போகவிடாததால் 12 வயது சிறுவன் நிஷாந் தற்கொலை!!

தாந்தாமலை கோயிலுக்கு பெற்றோர் போக விடாததையடுத்து 12 வயது சிறுவன் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள சாளம்பங்கேணி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.
சாளம்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பிரகலாதன் நிஷாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் சம்பவதினமான நேற்று மாலை 5.00 மணியளவில் தந்தாமலை கோவிலுக்கு போகப் போவதாக பெற்றோரிடம் கோரிய நிலையில் அதற்கு பெற்றோர் நாளை சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துக்கு செல்வதாகவும் அப்போது போகலாம் என தெரிவித்த நிலையில் மனமுடைந்த சிறுவன் வீட்டின் அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான்.
இதனையடுத்து சடலத்தை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
May be an image of 1 person, smiling and text that says "விழிநீர் அஞ்சலி பிறப்பு 生一 11 12 2013 இறப்பு 08 08 08 2025 செல்வன். பிரகலாதன் திசான் தகவல் நகவல்குடுர்யந்தினர்- குடும்றத்தி จให้ท่มปพ Na AILIEEN मदાसੇ የ."