புதினங்களின் சங்கமம்

யாழில் பொதுச் சுகாதாரத்திற்கும் உடல் நலத்திக்கும் தீங்கு..மருந்தகத செயற்பாடுகளை நிறுத்த நீதிமன்றம் கட்டளை

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்று சமுதாயத்தின் பொது சுகாதாரத்துக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறு ஏற்பட்டிருப்பதாக மன்று காண்பதாலும் அப்பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதாலும் அகற்றும் வரை மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்திக் யாழ்ப்பாண நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்து வியாபார ஸ்தானத்தில் ஒரு மரண நிகழ்வானது இடம்பெற்றிருக்கிறது என்பது முறைப்பாட்டாளர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து காணப்படும் விடயங்களில் இருந்து முகத்தோற்ற அளவில் மன்றுக்கு தெளிவாகின்றது.

இறந்தவரின் தொடர்பில், அவரது சடலமானது அங்கு இறுமிக் கிரியைகளுக்காக வைக்கப்பட்டு,

அகற்றப்பட்டதென்றும், அத்தகைய சூழ்நிலையில் குறித்த மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களில் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டு, அங்கு கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் இருந்ததென்றும், மருந்தகத்தில் காணப்படுகின்ற மருந்துகள் வெவ்வேறு வெப்புநிலைகளில் காணப்பட வேண்டுமென்றும், குறித்த எதிரி அன்றைய தினமே மருந்துகளை றாக்கைகளிலிருந்து அப்புறப்படுத்தியதுடன், வளிச்சீராக்கியை (AC) இயக்காமல் செய்ததன் மூலமும், அந்த மருந்துகள் பழுதடையக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் மன்றின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

அந்த மருந்தகம் மீளவும் தற்பொழுது வருகின்றதென்றும், அங்கு மருந்துகள் மேலும் விற்பனையாவதற்குச் சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என்றும், அதன் காரணமாகப் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடும் ஆபத்தும் காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டு, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் பிரிவு 98(b) (ii )(iii) இன் கீழும்.

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் பிரிவு 104 இன் கீழும், குறித்த மருந்துக்களையும் உணவுப் பொருட்களையும் விற்பனை செய்வதானது.

உடனடியாகத் தடுக்கப்படாதுவிட்டால், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு அல்லது ஊறு ஒன்று ஏற்படுமென்றும், பொதுமக்களின் உடல் நல வசதி மற்றும் பாதுகாப்பு வசதிக்குப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் இருக்கின்றதென்றும் குறிப்பிட்டிருப்பது,

முறைப்பாட்டாளரால் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக்கூற்று மற்றும் ஆவணங்களிலிருந்து மன்றிற்குத் தெளிவாகின்றது.

எனவே இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் கோரியவாறான ஒரு கட்டளையை ஆக்குவது தொடர்பில், முகத்தோற்றளவில் அத்தகைய கட்டளையை ஆக்குவது தொடர்பான சான்றுகள் இருப்பதாக மன்று திருப்தியடைந்து,

இவ்வழக்கின் எதிரியின் மருந்தகத்தில் மரணச் சடங்கு ஒன்று இடம்பெற்றிருப்பதாலும், அக்காலப் பகுதியில் எதிரியினுடைய மருந்தகத்தில் வளிச்சீராக்கி (AC) நிறுத்தி வைக்கப்பட்டதாக மன்றிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாலும்,

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் வழிகாட்டுதல்களின் கீழ் பேணப்பட வேண்டிய குறைந்த பட்ச வெப்பநிலை உரிய முறையில் பேணப்படவில்லை என்பது மன்றிற்கு முகத்தோற்றளவில் காண்பிக்கப்பட்டிருப்பதாலும், அந்தக் காலப் பகுதியில் மருந்தகத்தில் காணப்பட்ட மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம், கட்டளையை.

சமுதாயத்தின் சுகாதாரத்திக்கும் உடல் நல ஆரோக்கியத்திக்கும் ஊறு ஏற்பட்டு, தொல்லை ஒன்று ஏற்பட்டிருப்பதாக மன்று காண்பதனாலும் பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதால், வற்றை அகற்றியே வியாபாரத்தை நடத்த வேண்டுமென மன்று காண்பதால், குறிந்த பொருட்களை மறு தவணைக்குள் அகற்ற வேண்டுமென்று, கட்டளையை ஆக்கி, குறித்த மருந்தகமானது இத்தகைய பொருட்களுடன் தொடர்ந்து இயங்குவதனால்,

அது பொதுச் சுகாதாரத்திற்கும் உடல்நலத்திற்கும் தீங்கு ஏற்படுத்துவதால், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் பிரிவு 104இன் கீழ், குறித்த மருந்தகத்தின் செயற்பாடுகளை நிறுத்திக் கட்டளையாக்குகின்றேன் என நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.