யாழில் ஈ.எஸ்.பி. நாகரத்தினத்தின் திருவிளையாடல்!! பொலிசாரும் அராஜகம்!! (Photos)
தன்னை சமூகசேவகராகவும் கடவுள் பக்தனாகவும் காட்டி பிரபல வர்த்தகர் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி வரும் ஈ.எஸ் பேரம்பலம் மற்றும் கஜமுகன் காட்வெயர் நிறுவனத்தின் உரிமையாளரான ஈ.எஸ்.பி நாகரத்தினத்தின் திருவிளையாடலால் யாழ் கண்ணாதிட்டியில் வசிக்கும் பொதுமக்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். கண்ணாதிட்டியில் தனியார் கல்விநிறுவனமான சயன்ஸ்கோலுக்கு அருகில் உள்ள சிறிய ஒழுங்கையில் பாரிய கனரக வாகனங்கள் புகுந்து அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூரை ஏற்படுத்தி வந்தன. குறித்த வாகனங்கள் அந்த ஒழுங்கையால் சென்று கஜமுகன் நிறுவனத்துக்குச் சொந்தமான பொருட்களை இறக்கி ஏற்றுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போக்குவரத்துத்துச் செய்யவே பெரும் சிக்கல்பட்டதுடன் வடிகால்களும் உடைந்து விழுந்தும் இரவில் குறித்த வாகனங்களின் அதிர்வால் பெரும் பாதிப்புமடைந்தனர்.
இதனையடுத்து அந்தத் தொகுதியில் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற யாழ் மாநகரசபை உறுப்பினரான அருள்குமரனுடன் குறித்த மக்கள் தொடர்பு கொண்டு யாழ் மாநகர மேயருடன் கதைத்து குறித்த ஒழுங்கைக்குள் கனரகவாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கும் வீதிப்பலகையை அங்கு நிறுவினர். இதன் பின்னரும் குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான கனரக வாகனங்கள் அந்த ஒழுங்கையால் சென்று வந்தன. இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் இது தொடர்பாக வாகனங்களின் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தனர். கனர வாகனங்களில் பொருட்களை ஒழுங்கையால் ஏற்றியிறக்காது சிறிய வாகனங்களில் பொருட்களை ஏற்றியிறக்குமாறும் தெரிவித்திருந்தனர்.
ஈ.எஸ்.பேரம்பலத்தின் திருவிளையாடலால் மணிக்கணக்காக யாழ்ப்பாண பொலிஸ்நிலையத்தில் காத்திருக்கும் அப்பகுதி மக்கள்


குறித்த கனரக வாகனங்களில் சீமெந்து கொண்டு சென்று இறக்குவதால் அந்த வாகனங்களால் ஏற்படும் பாரிய அழுத்தம் காரணமாக சிறிய ஒழுங்கையான குறித்த வீதி மேடுபள்ளமானதுடன் அப்பகுதியில் வசிக்கும் வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளுக்கு துாசுகள் சென்று சுவாச நோய்களுக்கும் உள்ளாகினர். இவற்றையெல்லாம் ஈ.எஸ்.பி நாகரத்தினத்திற்கு எடுத்துக் கூறியுள்ளனர் சில இளைஞர்கள். அதனை நன்றாக கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்த ஈ.எஸ்.பி நாகரத்தினம் அங்கிருந்து சென்ற பின்னர் குறித்த பகுதிக்கு வந்த பொலிசார், நாகரத்தினத்தை இளைஞர்கள் அச்சுறுத்தினர் என்று தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக கூறி இளைஞர்களை பொலிஸ்நிலையம் வரச் சொல்லியுள்ளனர்.

கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை என்ற பகுதியால் கனரக வாகனங்கள் செல்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணப் பொலிசார், குறித்த வாகனங்களின் சொந்தக்காரரான ஈ.எஸ்.பி நாகரத்தினம் கொடுத்த போலி முறைப்பாட்டை துாக்கிக் கொண்டு மக்கள் முன் நின்றதால் அப்பகுதி மக்கள் பெரும் விசனமடைந்தனர். பொலிஸ் நிலையத்துக்கு வரச் சொன்ன இளைஞர்களுடன் தாமும் பொலிஸ் நிலையத்துக்கு இன்று சென்றுள்ளனர் அப்பகுதி மக்கள்.
காலையிலிருந்து பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த மக்களை பொலிசார் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்றும் இன்று மாலைவரை அப்பகுதியைச் சேர்ந்த குறித்த பொதுமக்கள் பொலிஸ்நிலையத்திலேயே நிற்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
கனரக வாகனங்களில் சீமெந்து உட்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்லாது சிறிய வாகனங்களைப் பயன்படுத்த மறுத்து அப்பகுதி மக்களுக்கு பெரும் அலங்கோலம் செய்யும் நாகரத்தினம் தன்னை நல்லவனாக இன்னும் பொதுமக்களுக்கு காட்டிக் கொண்டிருப்பது வேடிக்கைக்குரிய ஒன்று என பொதுமக்கள் தெரிவிக்கின்றர்.
தனது வியாபாரத்தில் வரும் லாபத்தில் வருமானவரி கட்டாமல் தப்பிப்பதற்காக சமூகசேவை செய்வதாக கூறி அரசாங்கத்தின் சமூகசேவைக்கான சலுகைகளைப் பெற்று அந்தப் பணத்தை வைத்து பாடசாலைகளுக்கு நன்கொடை கொடுத்தும் கோயில்களுக்கு சில ஆயிரங்களை வீசியும் தன்னை சமூகசேவகன் என்று கூறித்திரியும் இவ்வாறான பெருச்சாலிகளின் பின்னணி மிகக் கேவலமானது என்பதை பொதுமக்கள் வெளிப்படுத்தியுள்னர்.
குடாநாட்டில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் மற்றும் குழப்பநிலைகளைப் பயன்படுத்தி இவ்வாறான பணமுதலைகள் பொதுமக்களின் இரத்தத்தை உறுஞ்சி சம்பாதித்துவிட்டு தற்போது நல்ல வேசம் போட்டுத்திரிவது பெரும் கேடுகெட்ட செயல் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறானவர்களிடம் பெரும் சலுகைகளைப் பெற்று பொலிசாரும் பொதுமக்களுக்கு எதிராக செயற்படுவதாக அவர்கள் விசனம் தெரிவித்ததுடன் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் தம்மீது அக்கறை எடுத்து தம்மை காப்பாற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.

