புதினங்களின் சங்கமம்

யாழில் நிலத்தடி நீரை நஞ்சாக மாற்றும் நச்சு தொழிற்சாலைகள்!! அரச உத்தியோகத்தர்கள் லஞ்சம் வாங்குகின்றார்களா? Video,Photos

சுன்னாகம் முதலாளி சீலன் நச்சுத் தொழிற்சாலைகளை கந்தரோடை, சுன்னாகம், மல்லாகம் பகுதிகளுக்கும் விஸ்த்தரித்தார் !

சுற்றுச் சூழல் உத்தியோகத்தர்கள் சிலர் சீலனினின் இலஞ்ச வலையிலா ?

சுன்னாகம் பிரதேச சபையின் மீசைக்கார ஆர்.ஐ ஒருவர் கையூட்டுப் பெற்றாரா ?

பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் !

சுன்னாகம் பிரதேச சபை மற்றும் காங்கேசந்துறை பிரதேசசபை எல்லைக்குள் அலுமினியப் பாத்திர உற்பத்தி எனும் பெயரில் குடியிருப்புகள் மத்தியில் நச்சைப் பரப்பி சூழலை மாசுபடுத்தும் அலுமினியத் தொழிற்சாலைகள் எப்படி இயக்கப்படுகின்றன ? எப்படி இயங்குகின்றன? இனிமேல் எப்படி இயங்கும்?

இத்தகைய நச்சு விளைவுகளை உருவாக்கும் அலுமினியப் பாத்திர உற்பத்தித் தொழிற்சாலைகளை போன்ற தொழிற்சாலைகளை மாவட்ட செயலகத்தின் அரச அதிபர், பிரதேச செயலர்கள், அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரசபைகள், வெவ்வேறு திணைக்களங்கள் , உள்ளூராட்சி சபைகள், மாகாண விவசாய நீர்ப்பாசனத் திணைக்களம், கம நல சேவைத் திணைக்களம், மாகாண, மத்திய சுகாதார அமைச்சு அதிகாரிகள், சமூக நீதிக்காக ஜன நாயக ரீதியில் போராடும் வெகுஜன அமைப்புக்கள் ஒருங்கிணைந்து அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கும் அது போல மக்கள் குடியிருப்பற்ற வேறு பொருத்தமான இடங்களில் அமைக்கப்படும் கைத்தொழிற்பேட்டைகளுக்கும் இடம் மாற்றவேண்டும் என்று சுன்னாகம் , மல்லாகம், கந்தரோடை, அளவெட்டி, உடுவில், சண்டிலிப்பாய் பிரதேச மக்கள் பல்வேறு திணைக்களங்கள், அதிகாரசபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் மக்களிடம் தத்தமது கொள்கைகளுக்காக வாக்குக் கேட்கும் ஜன நாயக தாராளவாதக் கட்சிகள், புரட்சிகர இடது சாரிக்கட்சிகள் ஆகியோரிடம் சமூக ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மக்கள் குடியிருப்புக்களுக்குள் விவசாய நிலங்களில் நீரேந்து பிரதேசங்களில் நீரோட்டப் பாதைகளில் இத்தகைய தொழிற்சாலைகளை முதலாளிகள் அமைத்து இலட்சக் கணக்கான மக்களின் உயிரோடு விளையாட முற்படுவது அரச வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஒரு சில அரச அதிகாரிகள், முதலாளிகளின் இலஞ்ச வலையில் விழுந்து, அவர்கள் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும் என்பதையும் மக்கள் சுட்டிக் காட்டினர்.

அத்துடன் இத்தகைய நச்சு முதலாளிகளின் விரோதச் செயற்பாடுகளிலிருந்து தமது ஆரோக்கிய த் தை யும் உயிரையும் பாதுகாக்க மக்கள் முறைப்பாடுகளை அனுப்பும் போதும் அறவழியில் போராடும் போதும் , இவற்றையே காரணம் காட்டி அந்த நச்சு முதலாளிகளிடம் ஒரு சில சாதாரண அரச உத்தியோகத்தர்கள் தொடக்கம் ஒரு சில பெரிய அதிகாரிகள் வரை, ஒரு சில அரசியல்வாதிகளும் “லைசன்ஸ்” கொடுப்பதற்காக லஞ்சம் கோருவது தென்னிலங்கை மாவட்டங்களின் பாணியில் வடக்கிலும் யாழ். மாவட்டத்திலும் இடம்பெற்றுவருவதையும் மக்கள் கவலையுடனும் கோபத்துடனும் தெரியப் படுத்தினர்.

No photo description available.

ஒரு சில அரச உத்தியோகத்தர்கள் நச்சு முதலாளிகளால் லஞ்ச வலையில் விழுத்தப்படுவர்… லஞ்சம் மது,மாது, விருந்துகள், பணம், ஏனைய பொருட்களாக….அமையும். இவற்றை ஒரு சில அரச அதிகாரிகளும் ஒரு சில அரசியல்வாதிகளும் அனுபவிக்கின்றனர். (பெரும்பாலான நல்ல அரச உத்தியோகத்தர்கள், பெரும்பாலான நல்ல நேர்மையான அதிகாரிகள், நல்ல அரசியல்வாதிகள் இவற்றைத் தடுக்கவும் தீய சக்திகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவும் தீரமாகக் களத்தில் இறங்கியுள்ளமை நல்ல செய்தியாகும்)

லஞ்சம் வாங்கிச் செயற்படுபவர்களால்
மக்களின் ஆரோக்கியம், உயிர்வாழ்க்கை, சமாதானம் என்பன குலைந்து சின்னாபின்னமாகும். ஒரு கட்டத்தில் இலஞ்சம் கொடுப்பவர்களும் இலஞ்சம் வாங்குபவர்களும் நீதிதேவதையின் முன் நிலைகுலைந்து நிர்க்கதிக்குள்ளாகி தம்மைத்தாமே நாசமாக்கும் நிலை உருவாகும் என்பதையும் கிராமங்களின் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் துயரத்துடன் தெரிவித்தனர்.

மக்களும் தனி நபர்களும், குடும்பங்களும் ஒருபோதும் தமது இருப்பும் வாழ்வும் நச்சு முதலாளிகளாலும் ஊழல் மோசடி அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் உருக்குலைக்கப்படுவதை அனுமதிக்கமாட்டார்கள் என்றும் தாம் வெகுண்டெழுந்து ஜன நாயக ரீதியில் மக்கள் பலத்துடன் போராடும் நிலையேற்படப்போகிறது என்றும் களவிஜயம் மேற்கொண்ட இடதுசாரிக் கட்சிகளின் பிரதி நிதிகள் தெரிவித்தனர்.

No photo description available.

ஊரிலுள்ள மக்களின் குருதி, என்பு மச்சை, சுவாசப்பை, மூளை, ஈரல், சிறு நீரகம் ஆகிய முக்கிய அங்கங்களில் புற்று நோயை ஏற்படுத்தி மக்களை சாகடிக்கக் கூடிய நச்சுத் தொழிற்சாலைகளை(அலுமினியப் பாத்திர உற்பத்தித் தொழிற்சாலைகளை) சுன்னாகம் ஐயனார் கோவிலடிப் பிரதேசம், கந்தரோடை- சுன்னாகம் பருத்திக்கலட்டிப் பிரதேசம் ( வலிகாமம் தெற்கு பிரதேச சபைப் பிரதேசம்) , மல்லாகம் ( வலிகாமம் வடக்கு பிரதேச சபைப் பிரதேசம்) ஆகிய இடங்களில் அமைத்து, தமது குடும்பத்தின் ஆடம்பர வாழ்வுக்காக வலிகாமத்தின் வளம் மிக்க சுன்னாகம், மல்லாகம்,கந்தரோடைப் பிரதேசங்களின் நிலத்தடி நீர், நிலம், காற்று ஆகியவற்றை நச்சாக்கி 4000 குடும்பங்களின் 150000(ஒன்றரை இலட்சம்) மக்களை உடனடியாகவும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை எதிர் காலத்திலும் அழிப்பதற்கு கங்கணம் கட்டிச் செயற்படும் நடராசா ஜெயசீலன் எனும் முதலாளி கடந்த 5 வருடங்களாக சில அரச உத்தியோகத்தர்களை இலஞ்சம் கொடுத்து வாங்கினார்.

May be an image of 1 person, water heater and tea strainer

பல வருடங்களாக சுன்னாகம் (வலி. தெற்கு) பிரதேசசபை, காங்கேசன்துறைப் பிரதேச சபை(வலி.வடக்கு ), வலிகாமம் தெற்கு(உடுவில்) பிரதேச செயலகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை( யாழ். கச்சேரி அலுவலகம் மற்றும் கொழும்பு தலைமை அலுவலகம்), யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகாரசபை, வட மாகாண சுகாதார அமைச்சின் மாகாணப்பணிப்பாளர், யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், சுன்னாகம் பொலிஸ் நிலையம் முதலிய பல்வேறு அரசாங்கப் பிரிவுகளுக்கும் முறையிட்டபடியேதான் சுன்னாகம், கந்தரோடை, மல்லாகம் மக்கள் உள்ளனர்.

இருந்தாலும் சட்டவிரோதமாக தனது அலுமினியப் பாத்திர உற்பத்தித் தொழிற்சாலையை இரகசியமாக த.ஜெயசீலன் தொடர்ந்து வலிகாமம் தெற்கு, வலிகாமம் வடக்கு பிரதேசங்களில் இப்பொழுதும் இயக்குகிறார்.

சுன்னாகம் ஐயனார் கோவிலடிப் பிரதேசத்தில் நடராசா ஜெயசீலனால் பல வருடங்களாக இரகசியமாகவும் சட்ட விரோதமாகவும் இயக்கப்பட்ட அலுமினியப் பாத்திர உற்பத்தித் தொழிற்சாலையை நிறுத்தி மூடும்படி வலிகாமம் தெற்குப் பிரதேச சபை, நடராசா ஜெயசீலனுக்கு கடிதமூலம் பல மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்ததது. அத்துடன் வலிகாமம் வடக்கு மல்லாகம் பிரதேசத்தில் நடராசா ஜெயசீலனால் இரகசியமாகவும் சட்ட விரோதமாகவும் இயக்கப்பட்ட அலுமினியப் பாத்திர உற்பத்தித் தொழிற்சாலையை நிறுத்தி மூடும்படி, வலிகாமம் பிரதேச சபையின் செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு, தீடீர் கள விஜயத்தின்போது, சட்டவிரோத இரகசிய அலுமினியப் பாத்திர உற்பத்தித் தொழிற்சாலைக்கு நேரடியாகச் சென்று ஜெயசீலனுக்கு உத்தரவு வழங்கியிருந்தது. ஆயினும் முதலாளி ஜெயசீலன் சுன்னாகம் ஐயனார் கோவிலடிப் பிரதேசத்தில் அதே இடத்திலும் மல்லாகம் பிரதேசத்தில் அதே இடத்திலும் அலுமினியப் பாத்திர உற்பத்தித் தொழிற்சாலைகளைத் தொடர்ந்தும் சட்டவிரோதமாக, இரகசியமாக இயக்குகிறார்.
இன்று 04.08.2024 ஞாயிற்றுக் கிழமை காலையில் அலுமினியப் பாத்திர உற்பத்திக்கான இயந்திர சாதனங்களின் இரைச்சல் தொடர்ந்து கேட்டதாக எமது செய்தியாளர் உறுதிப் படுத்தினார்.

அலுமினியப் பாத்திர உற்பத்தித் தொழிற்சாலை சுன்னாகம் ஐயனார் கோவிலடிப் பிரதேசத்தில் தற்பொழுதும் தொடர்ந்தும் இயங்குவதை இங்கு இணைக்கப்பட்டுள்ள ஒளி ஆவணங்களில் காணலாம்.

May be an image of temple

அலுமினிய விஷத்தின் அபாயம்:

இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள அலுமினியப்பாத்திர உற்பத்தித் தொழிற்சாலைகளின் அலுமினியக் கழிவுகளான அலுமினியத்தூசு, அலுமினியத் துகள்கள், அலுமினியச் சிதறல்கள், அலுமினியச் சுருள்கள் வளிமண்டலம், நிலம், நிலத்தடி நீர் ஆகிய மூன்றையும் மாசுபடுத்தி நஞ்சாக்கும்.

மக்கள் வாழும் வீடுகளுடன் , ஆலயங்கள், முன்பள்ளிகள், பாடசாலைகள் ஆகியவற்றுக்கருகில், பயிர் செய் நிலங்களில், குடியிருப்புக்குள், நீரோட்டப் பிரதேசங்களில், நீரேந்து பிரதேசங்களில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கட்டுமான அமைப்புக்குள் இயங்கும் அத்தகைய அலுமினியப்பாத்திர உற்பத்தி தொழிற்சாலைகளால் அலுமினியக் கழிவுகள் வளிமண்டலத்துக்கும் நிலத்திற்கும் நிலத்தடி நீருக்கும் போய்சேரும். அவை மாசுபடுத்தப்படும்போது சமகாலத்தில் வாழும் மனிதர்களுக்கு உடனடியாகவும் நீண்ட காலத்திற்கு அடுத்தடுத்த சந்ததிகளினதும் உயிர் வாழ்வுக்கும் பாரிய அபாயங்களை ஏற்படுத்தும்.

இதுபற்றிய போதிய ஆய்வுகளும் ஆதாரங்களும் வெளியீடுகளும் உள்ளன.

அலுமினியம் போன்ற பார உலோகங்களுடன் சம்பந்தப்பட்ட கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளை எங்கே எப்படி எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கான சுற்றாடல் பாதுகாப்பு சட்டங்கள், உள்ளூராட்சிச் சட்டங்கள் முதலியன தெளிவாக உள்ளன.

மேலும் இது போன்ற கழிவுகளினால் குடியிருப்பாளர்களுக்கும் அவர்களின் உயிர் வாழ்வுக்கும் அபாயத்தை உருவாக்குதல் சட்டரீதியாக குற்றவியல் குற்றமாகும்.

அது பாரதூரமானதாகும். அமைதியான சமாதானம் மிக்க குடியிருப்பாளர்களின் நிம்மதியான மானிட வாழ்வுக்குச் செய்யும் மிகக் கொடூரமான துரோகமாகும்.

அலுமினிய விஷம் மனித உடலுக்கு மிகவும் அபாயமானது. இரத்த உள்ளடக்கம், தசைக்கூட்டு அமைப்பு – என்புத் தொகுதி அழிதல், சிறுநீரகப் பாதிப்பு, ஈரல் பாதிப்பு, சுவாசத் தொகுதி மற்றும் மூளை செயலிழப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பும் செயலிழப்பும் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

அலுமினியம், அறியப்பட்ட நியூரோடாக்சிகன்ட், அறிவாற்றல் செயலிழப்புக்கு பங்களிக்கிறது மற்றும் அல்சைமர் நோய்க்கு பங்களிக்கலாம். முக்கிய காரணம் வாழும் சூழல் அலுமினியத்தால் மாசு அடைந்தால் அலுமினியம் மூளைக்குள் நுழைந்து படிந்து விடும். முறையான சுழற்சியில் இருந்து அல்லது உறிஞ்சும் இடத்திலிருந்து அலுமினியம் மூளைக்குள் நுழைவதற்கு மேற்சொன்ன மூன்று வழிகள் உள்ளன.

எலும்புக்கூட்டிற்கு அலுமியத்தின் நச்சு விளைவுகளில் எலும்பு முறிவுகள், வலிமிகுந்த ஆஸ்டியோமலாசியா, ஹைப்போபராதைராய்டிசம், மைக்ரோசைடிக் அனீமியா, கொலஸ்டேடிக் ஹெபடோடாக்சிசிட்டி மற்றும் சிறுநீரக நொதி 25-ஹைட்ராக்ஸிவைட்டமின் D-1 ஆல்பா ஹைட்ராக்சிலேஸை அடக்குதல் ஆகியவை அடங்கும்.

அலுமினியத்தின் இரட்டை விளைவு, அதாவது
கால்சியம் இழப்பை ஏற்படுத்துதல் மற்றும் ஃவுளூரைடை குடலில் உறிஞ்சுவதைத் தடுப்பது, எலும்பில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும், இது எலும்புகள் பலவீனப்பட்டு தானாகச் சிதைந்து என்பு மூட்டுக்கள் செயலிழப்புக்கு அல்லது இழப்புக்கு காரணமாகும்.

ஆகவே இத்தகைய தொழிற்சாலைகளை சட்ட ரீதியற்ற முறையில் குடியிருப்புக்குள் நிறுவி பல ஆண்டுகளாக இயக்கியிருக்கக்கூடியவர்கள் யாராகவிருந்தாலும் எங்கிருந்தாலும் பின்வரும் விடயங்களை மிகத் தயவுடன் கவனிக்கவேண்டும்.
1) நீங்கள் உங்களதும் குடியிருப்பாளர்களதும் ஆரோக்கியமான நிம்மதியான வாழ்வை, அவர்களின் உயிர்வாழ்வை, அவர்களின் உயிரை அபாயத்துக்குள்ளாக்கி உங்கள் வர்த்தகத்தை எப்படி நிறுவிக்கொள்ளமுடியும் ? மனச்சாட்சியுடன் சிந்தித்துப் பாருங்கள் !
2) நீங்கள் ஈட்டும் சிறு இலாபத்தில் பொதுமக்களின் மூளை, நரம்புத்தொகுதி, சிறுநீரகம் முதலிய பகுதிகள் பாதிக்கப்பட்டு அவர்கள் நோயாளிகளாகி இறக்கும் நிலை வருமெனில் அவர்களின் உயிரா அல்லது உங்களின் சிறு இலாபமா எனும் பெரும்கேள்விகள் எழுமல்லவா?

ஒரிருவரின் சுய நலத்தினால், சிறு இலாப நோக்கத்தினால், குறுக்கு உபாயங்களினால் பெரும் பெறுமதியான உயிர்வாழ்வும் ஆரோக்கியமும் நிம்மதியும் சிதையும் நிலைக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பல மனிதர்களின் கேள்விகள் மிக அவசரமானவையல்லவா?

விஞ்ஞான பூர்வமாக அனைவருக்கும் நன்மை தரக்கூடிய வழிவகைகளைச் சிந்திப்பதில் இலகுவான தீர்வுகள் உள்ளன….. இத்தகைய நச்சுத் தொழ்ற்சாலைகள் மக்களை நோயாளிகளாக்கும். இவற்றை மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில், பயிர்செய் நிலங்களில், நீரோட்டப் பாதைகளில், நீரேந்து பிரதேசங்களில் இயங்க அனுமதித்தால் மனித வளமும் நில வளமும் நீர் வளமும் மாசுற்று நச்சாகி அழியும்.

இது பாரிய சமூக மனித வள அனர்த்தங்களை விளைவிக்கமுன்னர்
சுன்னாகம் (வலி. தெற்கு) பிரதேசசபை, காங்கேசன்துறைப் பிரதேச சபை(வலி.வடக்கு ), வலிகாமம் தெற்கு(உடுவில்) பிரதேச செயலகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை( யாழ். கச்சேரி அலுவலகம் மற்றும் கொழும்பு தலைமை அலுவலகம்), யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகாரசபை, வட மாகாண சுகாதார அமைச்சின் மாகாணப்பணிப்பாளர், யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், நீதித் துறை ஆகியன உடன் களத்தில் இறங்கி மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டிக்
கொள்கின்றனர்.