புதினங்களின் சங்கமம்

யாழ்.பருத்தித்துறை வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக இடம்பெறும் சம்பவம் அம்பலம்!

யாழ்.வடமராட்சி – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உணவுச்சாலையில் பிற்பகல் 6 மணிக்கு பின்னர் நோயாளர்கள் சுடுதண்ணீரை பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையில் உள்ளனர்.

குறித்த உணவுச்சாலையில் 6 மணியுடன் சுடு தண்ணீர் வழங்கல் நிறுத்தப்பட்டுகிறது. அவசரமாக சுடுதண்ணீர் தேவைப்பட்ட மூவர் நேற்றிரவு 6:45 மணியளவில் சுடுதண்ணீர் பெறுவதற்கு சென்றுள்ளனர்.

அவ்வாறு சென்றவர்களிடம் இங்கு 6:00 மணியுடன் சுடுநீர் நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு உங்களுக்கு சுடுநீர் அவசியமெனில் ரூபா 100 தாருங்கள், மின்சார கேற்றிலில் சுடுநீர் வைத்து தருகின்றேன் என உணவுச்சாலை நடத்துனர் கோரியுள்ளார்.

ரூபா 100 கேட்கப்பட்டதால் சுடுநீர் பெற்றுக்கொள்ளாமல் சென்றுள்ளனர். இதனால் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களுக்கு உதவியாக நிற்பவர்கள் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

உணவுச்சாலையில் நின்றவருடன் சுடுநீர் பெற சென்றவர்கள் உரையாடிய போது, மருத்துவமனை உணவுச்சாலை முகாமையாளர், தம்மிடம் ரூபா 140000/- மாதாந்த குத்தகை பெறுவதால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவுச்சாலையில் சலரோக, நோயாளர்களுக்கு தேவையான எந்தவிதமான உணவு வகைகளையும் பெற்றுக்கொள்ள முடிதாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

ஆனால் அங்கு பெற்றுக் கொள்ளக் கூடிய உணவுகளாக கொத்துரொட்டி பிட்டு கொத்து, பரோட்டா, ரொட்டி, சம்பா அரிசி சோறு, வெள்ளை அரிசி சோறு போன்ற நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்ததல்லாத உணவுப் பொருட்கள் மட்டுமே அங்கே விற்பனையாகின்றன.

குறிப்பாக சிற்றுண்டிகளாக மஸ்கற், பூந்தி லட்டு போன்றனவே அதிகளவில் விற்பனையாகின்றன.

யாழ்.வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல இலட்சம் செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் தொகுதி உரிய பராமரிப்பின்மையால் செயலிழந்துள்ளது.

இதனால் நோயாளர்கள் ஒரு லீட்டர் குடிநீரை ரூபா 80/- பெறுமதியிலேயே பெற்றுக் கொள்கின்றனர்.

வைத்தியசாலையில் பணியாற்றுபவர்கள், விடுதியில் தங்கியுள்ளவர்கள் உட்பட அனைவரும் மருத்துவமனைக்கு வெளியே சென்று பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொள்கின்றனர்.

இன்று வைத்தியசாலையின் 6ம் விடுதியில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளர்கள் பல மணி நேரமாக கட்டிலின்றி கதிரைகளில் அமர்திருந்துள்ளனர். அண்மை நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.