புதினங்களின் சங்கமம்

யாழில் இளைஞனை வாளால் வெட்டிக் காயப்படுத்திய 4 பேர் சிறைக்குள் அடைக்கப்பட்டனர்!!

யாழ்ப்பாணம் மருதனார்மட பகுதியில் இளைஞன் ஒருவரை வாளினால் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய குற்றத்தில் கைதான 4 இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மருதனார்மடம் சந்தியில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இளைஞன் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வியாபார நடவடிக்கையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை , வன்முறை கும்பல் ஒன்று இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றிருந்தது.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் , தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

முன் பகை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமது விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.