வவுனியாவில் கெரோயினுடன் இருவர் கைது!
வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவிற்கு அருகில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த பகுதியில் கெரோயின் விற்பனை இடம்பெறவுள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசியதகவலை அடுத்து குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் போதைப்பொருளை விற்பனை செய்ய வந்த நபரையும்,அதனை கொள்வனவு செய்யவந்த ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து மில்லிகிராம் அளவிலான கெரோயின் போதைப்பொருளை மீட்டபொலிசார் நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

