யாழில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு தீ மூட்டி தப்பியோடிய கும்பல்!!
யாழ்ப்பாணத்தில் வாகனம் ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மூர் வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் , தனது வாகனத்தினை , வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த வேளை நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு வேளை வாகனத்திற்கு தீ வைத்து விட்டு , வன்முறை கும்பல் தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.