புதினங்களின் சங்கமம்

வடக்கு கல்வி அதிகாரி உட்பட ஒரே நேரத்தில் இருவருடன் பூநகரிக் காட்டுக்குள் ரீச்சர் ஜல்சா!! பிடிபட்டது எப்படி?

பூநகரி வெட்டுக்காட்டுப் பகுதியில் வடக்கு மாகாண கல்வி அதிகாரி மற்றும் இன்னொரு இளைஞனுடன் ஒரே நேரத்தில் உறவு கொண்டிருந்த திருமணமான ஆசிரியை ஒருவர் சிங்கள சுற்றுலாப் பயணிகள் சிலரால் பிடிபட்டுள்ளார்கள். இச் சம்பவம் ஒரு சில வாரங்களுக்கு முன் நடந்துள்ளது என்றாலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட வீடியோ தற்போதே வட்சப்குறுாப் சிலவற்றில் பகிரப்பட்டு வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற கலைப்பிரிவுக்கான பிரயோகப் பரீட்சை மேற்பார்வையாளராக கடமைக்குச் சென்ற யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரும் வடக்கு மாகாண கல்வி அதிகாரி ஒருவரும் இன்னொரு இளைஞனுமே பிடிபட்டவர்களாவர். பூநகரி கௌதாரிமுனைக்கு அண்மையில் உள்ள வெட்டுக்காடு என அழைக்கப்படும் காட்டுப்பகுதியுடன் கூடிய மணல் பிரதேசப்பகுதிக்கு சுற்றுலாவாகச் சென்ற தென்பகுதி சிங்களகுடும்பத்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடமே இவர்கள் பிடிபட்டுள்ளார்கள்.

அவர்களால் எடுக்கப்பட்ட வீடியோவில்,

வாகனம் ஒன்றை விட்டு இறங்கிய குறித்த சிங்களச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அப்பகுதியை வீடியோவாக எடுத்துக் கொண்டு சென்ற போது இளைஞன் ஒருவன் இவர்களைக் கண்டு ஓடத் தொடங்கியுள்ளான். உடனடியாக அவனை துரத்தி பிடித்துள்ளார்கள். அவன் ஓடிய இடத்திற்கு சற்றுத் தொலைவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் வயதான தோற்றத்துடன் கூடிய ஆண் ஒருவரும் அரைகுறை ஆடைகளுடன் காணப்பட்டனர். அவர்களை சிங்களவர்கள் விசாரணை செய்வதும் இளைஞனையும் விசாரணை செய்வதும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெண்ணின் அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பையை பரிசோதித்த போது பெண் ஒரு ஆசிரியர் என்பதுடன் பூநகரிப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பரீட்சை மேற்பார்வையாளராக கடமையாற்றும் ஆவணங்களும் காணப்பட்டுள்ளது. அதே நேரம் அந்த வயதான தோற்றத்தை கொண்ட ஆணின் ஆவணங்களைப் பரிசோதனை செய்த போது அவர் வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்படக்கூடிய ஆவணங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த இளைஞன் பூநகரிப் பாடசாலை ஒன்றில் கல்விசாரா ஊழியராக கடமையாற்றுவதுடன் ஆட்டோவில் கல்வி அதிகாரியையும் குறித்த பெண்ணையும் ஏற்றி வந்தவர் என சிங்களவர்கள் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வீடியோவில் சிங்களவர்களை 3 பேருமாக கெஞ்சுவது தொடங்கி சற்று தொலைவில் காணப்படும் படைமுகாமுக்கு அவர்களை கொண்டு செல்ல ஆயத்தமான காட்சிகளும் அடங்கியுள்ளன. அதன் பின்னர் அவர்களை படைமுகாமுக்கு கொண்டு சென்றார்களா அல்லது விட்டுவிட்டார்களா என்ற தகவல்கள் வீடியோவில் காணப்படவில்லை. 4 நிமிடங்கள் அடங்கிய குறித்த வீடியோ தற்போது சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரின் வட்சப் குறுாப்களிலும் உலாவருவதாக தெரியவருகின்றது.