யாழில் அழுகிய நிலையில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு!!
யாழ். (jaffna) இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் இளவாலை பண்டத்திரிப்பு – செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இறந்தவரின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், அயலவர்கள் அது குறித்து சோதித்த போது சடலம் வீட்டின் முன்புறத்தில் கிடப்பதை அவதானித்து பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில், மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் (Jaffna) வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.