புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி! அதிர்ச்சிக் காட்சிகள்(video)

கிளிநொச்சியில் இன்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.
Image may contain: one or more people, night and indoor
குறித்த இளைஞர்கள் இருவரும் விபத்து இடம்பெற்ற பகுதியில் தமது வீட்டுக்கு அருகில் புகையிரத கடவையில் அமர்ந்திருந்து சம்பாசித்துக்கொண்டிருந்ததாகவும், புகையிரதம் வருவதை அவதானிக்காமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Image may contain: night

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றயவர் தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No photo description available.

விபத்து தொடர்பான மேலதிக தகவல்களை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரழந்தவர்களின் சடலங்கள் புகையிர அதிகாரிகளினால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Image may contain: one or more people, night and indoorImage may contain: night and indoorImage may contain: one or more people, people standing, night and outdoorImage may contain: one or more peopleImage may contain: one or more peopleImage may contain: one or more people, night and outdoorImage may contain: 1 person, nightImage may contain: one or more people and indoorImage may contain: nightImage may contain: one or more people and night