லண்டனில் இருந்து தந்தையின் இறுதிச்சடங்கிற்கு யாழ் வந்தவர் திடீர் மரணம்!!
தந்தையின் இறுதிச்சடங்கிற்கு லண்டனில் இருந்து, யாழ்ப்பாணம் வருகை தந்தவர் , திடீர் சுகவீனமாக காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைநகர் மணற்காட்டு பகுதியை சேர்ந்த நபரே என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது தந்தையின் இறுதி கிரியைகளுக்காக கடந்த 30ஆம் திகதி குடும்பத்துடன் யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.