முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடும் மாணவர்கள்!
முல்லைத்தீவு (Mullaitivu) பகுதியில் உள்ள விசுவமடு மகா வித்தியாலத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.விசுவமடு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் மற்றும் மாணவர்களின் சகாக்கள் ஊடாக தொடர்ச்சியாக தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறையிடப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.