புதினங்களின் சங்கமம்

இரு முஸ்லீம்கள் பலி!! இலங்கையில் சிங்கள முஸ்லீம் கலவரம் அகோரமாகின்றது…

குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலில் முஸ்லிம்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
மினிவாங்கொடையைச் சேர்ந்த பௌஸுல் ஹமீட் ( வயது 40 ) மற்றும் கொட்டருமுல்லையைச் சேர்ந்த அமீர் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்குள் புகுந்த வன்முறையாளர்கள் இவர்களை படுகொலை செய்துள்ளனர்.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறையில் இதுவரை 9 பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
30 முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.