இலங்கையில் தாயும் அவுஸ்ரேலியாவில் மகனும் ஒரே நாளில் மரணம்!!
இலங்கையில் தாயும் அவுஸ்திரேலியாவில் மகனும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் சுனில் விஜேசிறியின் மகன் அவுஸ்திரேலியாவில் பணிபுரியும் போது அகால மரணமடைந்துள்ளார்.
மகன் உயிரிழந்த தினத்திலேயே தாயாரும் இலங்கையில் உயிரிழந்துள்ளார்.
மகனின் இறுதிக் கிரியைகள் இன்று மதியம் 12:00 மணியளவில் மெல்போர்னில் நடைபெற்றன.
உயிரிழந்த தாயாரின் இறுதி கிரியைகள் இன்று மாலை 5.00 மணி அளவில் களனி, பிலப்பிட்டிய மயானத்தில் இடம்பெறவுள்ளது.
உயிரிழந்த மகனுக்கு 40 வயதாகின்ற நிலையில் தாயாருக்கு 68 வயதென தெரியவந்துள்ளது.
இதேவேளை, லக்ஷ்மன் சுனில் விஜேசிறி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெத்தியகொட அமைப்பாளராக செயற்படுகின்றார்.