புதினங்களின் சங்கமம்

யாழில் இன்று 5வது சடலம் கரையொதுங்கியது! கடலுக்குள் மிதந்து வரும் சடலங்களால் தொடர்ந்து பதற்றம்!!

யாழ்ப்பாண கரையோரங்களில் குறிப்பாக வடமராட்சி கரையோரங்களில் தொடர்ச்சியாக சடலங்கள் கரையொதுங்கி வரும் நிலையில் இன்று மேலும் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டதை இன்று நண்பகல் பிரதேச மீனவர்களால் அவதானிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் – பூணைத் தொடுவாய் பகுதி கடற்கரையில் மேலும் ஒரு சடலம் கரையொதுங்கியுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஒரு வார காலத்திற்குள்ளாக மேலும் நான்கு சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் இன்று மேலும் இரண்டு சடலங்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளன.

நெடுந்தீவு, மணல்காடு, வல்வெட்டித்துறை ஆகிய பகுதி கடற்கரைகளில் குறித்த மூன்று சடலங்கள் கரையொதுங்கியிருந்தன.

இதேவேளை, வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது. குறித்த சடலம் சிம்பன்சி குரங்கினுடையது என அடையாளம் காணப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.