திருகோணமலையில் பயங்கரம்!! உயிருடன் வைத்து வாகனத்தில் எரிக்கப்பட்ட வர்த்தகர்!! Photos
திருகோணமலை வர்த்தகர் ஒருவர் கெப் வண்டியில் கடத்திச் செல்லப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டதால் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை – அலஸ் தோட்ட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட காரணத்துக்காக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.