புதினங்களின் சங்கமம்

யாழில் குளியல் அறைக்குள் இரகசிய கமரா பூட்டி மனைவியின் தங்கை, மாமி குளிப்பதை ரசித்த வைத்தியர்!!

யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரை அவரது மனைவி விவாகரத்து செய்வதற்கு ஆயத்தமாயுள்ளார். குறித்த வைத்தியரை உடனடியாக தனது வீட்டை வெளியேற்றியுள்ளார் மனைவி.திருநெல்வேலிப்பகுதியில் தனது சீதன வீட்டில் வாழ்ந்து வந்த வைத்தியரே இவ்வாறு மனைவியால் துரத்தப்பட்டுள்ளார். மனைவியுடன் வாழ்ந்து வந்த சகோதரி மற்றும் தாய் ஆகியோரை வீட்டு குளியலறையில் இரகசிய கமரா பூட்டி வீடியோவாக பார்த்து ரசித்து வந்துள்ளார் குறித்த வைத்தியர். நீண்ட காலமாக இந்தச் செயற்பாடு நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குளியலறையில் பூட்டப்பட்டிருந்த கண்ணாடியின் மேற் பகுதியில் குறித்த இரகசியக் கமரா பொருத்தப்பட்டுள்ளது. கைத் தொலைபேசியில் கண்காணிக்ககூடியதான இக் கமரா வைத்தியர் வீட்டில் இல்லாத வேளைகளிலும் வெளியே எப்பகுதியில் இருந்தும் கைத் தொலைபேசியில் பார்க்க கூடியவாறு இணையத்துடன் இணைக்கப்பட்டதாக இருந்துள்ளது.

குளியலறையில் ஏற்பட்ட நீர்குழாய் திருத்தம் ஒன்றிற்காக வரவழைக்கப்பட்ட ‘பிளம்பர்’ ஒருவரே இந்தக் கமரா அங்கு பொருத்தப்பட்டிருந்ததை வீட்டில் இருந்த மனைவியின் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே அங்கு பிரளயம் உருவாகியது. அரச உத்தியோகத்தரான வைத்தியரின் மனைவிக்கு இவ்விடயம் அவரது தாயாரால் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. வைத்தியரின் மனைவி இது தொடர்பாக வைத்தியருக்கும் அறிவித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த வைத்தியர் அந்த கமராவைப் பொருத்தியது யார் என்பது தொடர்பாக திசை திருப்பும் செயற்பாட்டை நடாத்தியுள்ளார். தங்களைத் தவிர அந்த குளியலறையை யார் யார் பாவித்தது என்று அவர் விசாரணையைத் தொடங்கி அங்கு வந்து ஓரிருநாள் தங்கியிருந்த மனைவியின் உறவுகள் மற்றும் சிலரை குற்றம் சுமத்தியுள்ளார். இந் நிலையில் வீட்டுக்கு வந்த மனவைியின் சகோதரி குறித்த கமராவை நீதான் பொருத்தியிருப்பாய் என வைத்தியரைக் குற்றம் சாட்டி கூறியதால் அங்கு சண்டை ஏற்பட்டுள்ளது.

மனைவியின் சகோதரியை வைத்தியர் தாக்கியதாகவும் தெரியவருகின்றது. இதனால் அங்கு களோபரம் ஏற்பட்டுள்ளது. வைத்தியரின் தொலைபேசியை மனைவியின் சகோதரி பறித்துச் சென்று அயலவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து பாதுகாப்பு தேடியுள்ளார். மனைவியின் சகோதரியை அங்கிருந்து இழுத்துச் செல்வதற்காக வைத்தியர் முயன்ற போது அயல்வீட்டுக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்து பொலிசாருக்கு முறையிட முயன்றதால் அவர் அங்கிருந்து அகன்றுள்ளார். அதன் பின்னர் அங்கு வந்த மனைவி அவரது தொலைபேசியின் கடவுச் சொல்லை கொடுத்து ஆராய்ந்த போது வைத்தியரே இரகசிய கமராவை தொலைபேசியில் ‘அப்’ ஒன்றை நிறுவி பார்வையிட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மனைவி வைத்தியரை வீட்டிலிருந்து துரத்தியுள்ளதாக தெரியவருகின்றது.