கனடா மாமா கொண்டு வந்த பொறின் சரக்கு!! யாழில் நிறை வெறியில் பிரபல பாடசாலையின் 15 வயது மாணவர்கள்!!
கனடாவிலிருந்து வரும் போது கொண்டு வந்த வெளிநாட்டு மதுபாண போத்தலைத் திருடிக் கொண்டு சென்று தனது நண்பர்களுடன் குடித்து நிறை வெறியில் கிடந்துள்ளனர் யாழில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 10ல் கற்கும் 4 மாணவர்கள்.
அரியாலைப் பகுதியைச் சேர்ந்த மாணவனின் மாமன் கனடாவிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வந்து மாணவனின் வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார். அவர் அங்கிருந்து வரும் போது சில மதுபாணப் போத்தல்களையும் கொண்டு வந்ததாகத் தெரியவருகின்றது. அப் போத்தல்களில் ஒன்றை குறித்த மாணவன் நல்லுார் தேர்த்திருவிழா அன்று எடுத்துச் சென்று அரியாலைப் பகுதியில் உள்ள தனது நண்பனின் தந்தையின் தொழில் பட்டறை ஒன்றில் வைத்து தனது பாடசாலை நண்பர்களான 3 பேருடன் சேர்ந்து ஒரு லீற்றர் சாராயத்தை குடித்துள்ளனர். குடித்து சில நிமிடங்களிலேயே போதை தலைக்கேறி கத்திக் குளறியதுடன் வாந்தியும் எடுத்து அல்லோலகப்பட்டுள்ளனர்.
இதனால் குறித்த தொழில்பட்டறைக்கு அருகில் வசிப்பவர்கள் அங்கு சென்று பார்த்த போது 4 பேரும் நிலத்தில் புரண்டு கொண்டு மயக்க நிலையில் இருந்துள்ளனர். மது பாணப் போத்தல் மற்றும் மிக்சர் பைக்கற் போன்றவற்றை அவதானித்த அயலவர்கள் அவர்கள் நிறை வெறியில் இருப்பதை உணர்ந்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பட்டறையின் சொந்தக்காரனான மாணவன் ஒருவரின் தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த தந்தை தனது வாகனத்தில் அவர்களை துாக்கிப் போட்டுக் கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.
இதே வேளை குறித்த மாணவர்கள் நிறைவெறியில் உருண்டு புரண்ட காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டதாக தெரிவித்து குறித்த மாணவகளின் தந்தைகளில் இருவர் அவரது வீட்டுக்குச் சென்று முரன்பட்டதாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து குறித்த வீடியோ அகற்றப்பட்டுள்ளது.