சாவகச்சேரியில் பொதுமக்களை அடித்து விரட்ட ஆயத்தமாகும் பொலிசார்!! வீடியோ
சாவகச்சேரியில் கூடும் பொதுமக்களை அடித்து விரட்ட பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். அரச நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி செயற்பட்டு வருவதாக தெரிவித்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி்ன்றன. இன்றைய தினம் குறித்த வைத்திய அதிகாரி மருத்துவ விடுமுறை எடுத்து வைத்தியசாலையில் மருத்துர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியுள்ளார். அவரை பொலிசார் கைது செய்ய ஆயத்தமாகும் வேளையில் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முற்படுவார்கள் என்ற காரணத்தால் குறித்த பகுதியில் கலகம் அடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.