புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் எரிந்து கொண்டிருந்த வீட்டில் மயிரிழையில் தப்பிய குழந்தை!! புகைப்படங்கள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணகிநகர் பகுதியில் வீடு ஒன்று மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்த பொழுது வீடு தீ பிடித்துள்ளது.
மீனை வெட்டுவதற்காக வீட்டிலிருந்து வழியில் சென்று மீனை வெட்டிக் கொண்டிருந்த பொழுது திடீரென வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்ததை அவதானித்த பெண் ஓடிச் சென்று தொட்டிலில் படுத்துறங்கிய அவரது பிள்ளையை தூக்கிக் கொண்டார்.
இதன்பின் அயலவர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் வீடு முற்றாக எரித்துள்ளது .
இதன் போது வீட்டில் இருந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், தொலைபேசி, 2 மீன் பிடிவலைகள், உடைகள் மற்றும் வீட்டில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
May be an image of 1 person, money and textNo photo description available.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x