புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ் அரசியல்வாதியின் கறுப்பு பணத்தில் கனடா செல்பவர்களுக்கு லட்சக்கணக்கில் கடன்!! அப்பாவி பெண் ஏமாந்தது எப்படி?

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நுண்கடன் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிபவன் வெளிநாட்டு ஆசை காட்டி அப்பகுதியில் உள்ள பெண் ஒருவரை ஏமாற்றிய விதம் இங்கு தரப்பட்டுள்ளது. வெளிநாட்டு வெறியில் இருப்பவர்களை மட்டுமல்ல, வெளிநாட்டு வெறியை ஊட்டி அவர்ளின் பணத்தை பிடுங்கும் செயற்பாட்டை எவ்வாறு மேற்கொள்கின்றார்கள் என்பதற்கு இந்தச் சம்பவத்தை உதாரணமாகத் தருகின்றோம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நுண்கடன் வழங்கும் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். குறித்த நுண்கடன் வழங்கு நிறுவனத்தில் வேலை செய்பவன் அந்தக் கடனை வசூலிப்பதற்காக அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளான். அந்தப் பெண்ணி் வறுமை நிலையை கண்டு அந்தப் பெண்ணுக்கு கனடா செல்வதற்கு ஆசை ஊட்டியுள்ளான். யாழ்ப்பாணத்தில் தனக்குத் தெரிந்த மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவர் இருப்பதாகவும், அவர் கனடா செல்பவர்கள் கனடா எம்பசிக்கு காட்ட வேண்டிய லட்சக்கணக்கான வங்கி இருப்புத் தொகையை குறித்த நபர்களின் கணக்கிலேயே வைப்புச் செய்வார் என்றும் பின்னர் குறித்த நபர்கள் கனடா சென்ற பின்னர் அந்தக் காசை மீளவும் குறித்த அரசியல்வாதியின் கணக்கில் அங்கிருந்து வைப்பு செய்ய வேண்டும் எனவும் இதனால் அவரது கறுப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாறும் எனவும் கூறி, உங்களுக்கு அவரைக் கொண்டு உங்களது வங்கிக் கணக்கில் 25 லட்சம் போடுகின்றேன். நீங்கள் அதனை வைத்து கனடா விசாவுக்கு விண்ணப்பித்தால் உங்களுக்கும் விசா உடனடியாக கிடைக்கும். நீங்கள் கனடா போன பின்னர் குறித்த 25 லட்சத்தை அங்கிருந்து கனேடிய டொலராக அவரது வங்கிக்கு அனுப்புங்கள் எனக் கூறி அந்தப் பெண்ணுக்கு ஆசையைத் துாண்டியுள்ளான். அத்துடன் குறித்த செயற்பாட்டை செய்து முடிப்பதற்கு ஒரு லட்சம் ரூபா தேவை. அதை நீங்கள் ஒழுங்கு செய்து தந்தால் நான் எல்லா நடவடிக்கையும் எடுத்து உங்களை கனடாவுக்கு அனுப்புவேன் எனவும் கூறியுள்ளான்.

இதனையடுத்து குறத்த பெண் தனது காதுத் தோடு உட்பட சில நகைகளை அடகு வைத்து ஒரு லட்சம் ரூபா பணத்தை நுண்கடன் நிறுவனத்தில் வேலை செய்பவனுக்கு கொடுத்துள்ளார். இதன் பின்னர் குறித்த நபர் அந்தப் பெண்ணின் இலங்கை வங்கிக் கணக்கு இலக்கத்தை வாங்கிச் சென்றுள்ளான். ஓரிரு நாட்களில் அவனுக்கு இலங்கை வங்கியால் கொடுக்கப்பட்ட கடிதம் போல் உள்ள இந்தப் போலியான கடிதத்தை கொடுத்து, உங்கள் வங்கியில் 25 லட்சம் குறித்த அரசியல்வாதி போட்டுள்ளார். ஆனால் இது தொடர்பாக நீங்கள் இலங்கை வங்கியில் விசாரிக்க கூடாது. ஏனெனில் இலங்கை வங்கியில் உள்ளவர்கள் உங்களை சந்தேகிப்பார்கள். பின்னர் கனடா செல்ல முடியாது போய்விடும். ஆகவே நீங்கள் அவ்வாறு செய்யாமல் கனடா செல்வதற்கான ஏனைய ஆவணங்களை தயார்ப்படுத்துங்கள் என கூறியுள்ளான்.

சந்தோசத்தின் உச்சத்தில் இருந்த குறித்த பெண்ணும் பாஸ்போட் பெறுவதற்காக மேலதிக பணம் தேவைப்பட்டதால் ஒருவரை அணுகியுள்ளார். அவருக்கு தான் கனடா செல்லவுள்ள விடயத்தையும் அரசல்புரசலாக கூறிய போதே அவர் விபரமாக விசாரித்த போது குறித்த நுண்கடன் ஊழியரின் திருவிளையாடல் பிடிபட்டது.

உடனடியாக அந்தப் பெண்ணுக்கு சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. இலங்கை வங்கியில் உனது கணக்கில் 500 ரூபாவை வைப்பிலிடு. அப்போது உனது கணக்கில் 25 லட்சத்து 500 ரூபா இருக்க வேண்டும். இல்லை எனில் உடனடியாக இந்தக் கடிதத்தை கொண்டு போய் பொலிசாரிடம் கொடுத்து எனது பணத்தை இலங்கை வங்கி களவெடுத்துவி்ட்டது என முறைப்பாடு செய்யப் போகின்றேன் என குறித்த நுண்கடன்காரனுக்கு கூறு என விபரம் தெரிந்த அந்த நபர் குறித்த பெண்ணுக்கு கூறியுள்ளார். பெண்ணும் அவ்வாறே செய்துள்ளார். இலங்கை வங்கியில் 500 ரூபா வைப்பிலிட்ட போது அந்தப் பெண்ணின் புத்தகத்தில் 25 லட்சம் இருக்கவில்லை. உடனடியாக நுண்கடன் ஊழியருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொலிசாரிடம் போகப் போகின்றேன் என பெண் கூறி சில மணி நேரங்களில் நுண்கடன் ஊழியர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு ஓடி வந்துள்ளார். தான் தவறு செய்யவில்லை எனவும் குறித்த அரசியல்வாதி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி தான் வாங்கிய அந்த ஒரு லட்சம் ரூபா பணத்தை உடனடியாக தருவதாகவும் கூறியுள்ளார்.

அப்பாவிகளை விதவிதமாக ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மோசடிப் பேர்வழிகளிடம் அவதானமாக இருங்கள் வாசகர்களே…….

May be an image of text

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x